படகு மூழ்கியதில் 8 பேர் பலி! – அமெரிக்கா சம்பவம்

181
அமெரிக்காவில் சுற்றுலா சென்ற படகு மூழ்கிய விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு 30க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒரு படகில் சென்று கொண்டிருந்தனர். ஏரியின் மையத்தில் சென்றபோது, படகு திடீரென கவிழ்ந்தது.

குறித்த விபத்தில் படகில் இருந்தவர்கள் அனைவரும் ஏரியில் மூழ்கியதால் அலறி துடித்தனர். அவர்களது அலறலை கேட்ட அங்கிருந்த மீட்பு படையினர் உடனே அவர்களை காப்பாற்ற விரைந்தனர்.

ஏரியில் மூழ்கிய 7 பேரை மீட்டு வைத்தியசாலையி சிகிச்சைக்காக சேர்த்தனர். ஏரியில் மூழ்கி உயிரிழந்த 8 பேரின் உடல்கள மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மூழ்கியுள்ள மற்றவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE