டிவில்லியர்ஸின் விளம்பர பதிவு: கொந்தளித்த ரசிகர்கள்!

471

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ், சமீபத்தில் தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று இந்திய ரசிகர்களை வெறுப்புக்குள்ளாக்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் ஏபி டிவில்லியர்ஸ் சமீபத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஐ.பி.எல் கிரிக்கெட்டில் கலக்கியதன் மூலம் இவருக்கு இந்தியாவிலும் ரசிகர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்.

இந்நிலையில், மது தயாரிப்பு நிறுவனம் ஒன்று தங்களுடைய ஒயின் மதுபானம், இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதாக விளம்பரப்படுத்தியிருந்தது. அந்த விளம்பரத்தில் ஆட்டோ ஒன்றின் மீது பாட்டில் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் ‘Eagle has landed’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இந்திய தேசிய கொடி விளம்பரத்தின் கீழே இடம்பெற்றுள்ளது.

இந்த விளம்பர படத்தினை டிவில்லியர்ஸ் தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டிருந்தார். இந்த விடயம் இந்திய ரசிகர்களுக்கு வெறுப்பினை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தங்களது கண்டனங்களை டிவில்லியர்ஸுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.

அவர்களில் சிலர், ‘தேசியக் கொடியை தவறாக பயன்படுத்தியிருக்கிறீர்கள். இப்படி நீங்கள் செய்யக் கூடாது. எங்கள் நாட்டின் பெருமையை குலைக்கும் செயல் இது’ என பதிவிட்டுள்ளனர்.

SHARE