விஜய்-அட்லீ இணையும் புதிய படத்தின் சூப்பர் தகவல்- அட தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்

156

முருகதாஸுடன் மூன்றாவது முறையாக இணைந்த விஜய் அடுத்து அட்லீயுடன் மீண்டும் கூட்டணி அமைக்கிறார். இவருடனும் மூன்றாவது முறை தான், ரசிகர்களுக்கும் நன்றாக தெரிந்த விஷயம்.

அட்லீ-விஜய் இணையும் படத்தை AGS நிறுவனம் தயாரிக்க இருக்கிறது, இதில் என்ன விஷயம் என்றால் இந்த தயாரிப்பு நிறுவனம் விஜய்யுடன் இணையும் முதல் படம் இதுதானாம்.

இந்த தீபாவளிக்கு சர்கார் விருந்து கொடுக்கும் விஜய் அடுத்த தீபாவளிக்கும் அட்லீயுடன் இணைந்து விருந்து கொடுக்க இருக்கிறார்.

இந்த புதிய படத்தின் படப்பிடிப்பும் ஜனவரி மாதம் தொடங்குவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE