மணிரத்னம் இயக்கத்தில் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்க தயாராகி வரும் படம் செக்கச் சிவந்த வானம். இந்த படத்தின் மேக்கிங் மிகவும் வித்தியாசமாக இருப்பதாக பட தகவல்களை பார்த்து மக்கள் எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் ஜுங்கா பட புரொமோஷக்காக விஜய் சேதுபதி பேட்டிகள் கொடுத்து வருகிறார். அதில் அவர் பேசும்போது, சிம்பு ஊட்டிவிடுவது போல் வந்த புகைப்படத்தை பற்றி பேசியுள்ளார். எனக்கு சாப்பாடு வேண்டாம், புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றேன். ஆனால் சிம்பு கட்டாயப்படுத்தி ஊட்டியதோடு அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் என்றார்.
அதோடு சிம்பு, டிஆர் இருவரும் மிகவும் வேகமாக யோசிப்பார்கள், அதிக திறமை கொண்டவர்கள் என்று பெருமையாக பேசியுள்ளார்.