162

தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கணக்கு வைத்திருந்த பெண்ணுக்கு 3400 ரூபாய்க்கு பதிலாக சுமார் 7.5 கோடி ரூபாய் (இந்திய பெறுமதி) கணக்கிலிருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது., அமெரிக்காவை சேர்ந்த எல்லென் பிளம்மிங் என்ற பெண் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கணக்கு வைத்துள்ளார். வெறும் 3400 ரூபாய் இருந்த குறித்த கணக்கை சமீபத்தில் எல்லன் பரிசோதிக்கும் போது, 3400 ரூபாய்க்கு பதிலாக சுமார் 7.5 கோடி ரூபாய் அவரது கணக்கில் இருந்ததால் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.

உடனே, தனது வேலையை விட முடிவு செய்த எல்லென், தனது குழந்தைகளின் கல்வி கடனை அடைத்து விடலாம் என கனவுலகில் வாழத் தொடங்கியுள்ளார். எனினும், சந்தேகம் ஏற்பட்டு நிதி நிறுவனத்தை அவர் தொடர்பு கொண்ட போது கனவு கலைந்தது,புளோரிடாவில் எல்லென் பெயரில் வசிக்கும் வேறொரு பெண்ணுக்கு செல்ல வேண்டிய தொகையை தவறுதலாக உங்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளித்த நிறுவனம், 7.5 கோடியையும் திரும்ப பெற்றுக்கொண்டது.

குறித்த சம்பவத்தால் எல்லென் சோகத்தில் இருந்தாலும், இறந்த பின்னர் சில நிமிட கோடீஸ்வரி என என்னை யாரேனும் குறிப்பிடுவார்கள் என அவர் கூறியுள்ளார்.

SHARE