சாட் நாட்டில் தீவிரவாத தக்குதல்; 18 பேர் பலி

265

ஆப்ரிக்க நாடான சாட் நாட்டில் போகோஹரம் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டில் ஊடுருவிய போகோஹரம் தீவிரவாதிகள் அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்த துவங்கினர். போகோ ஹரம் தீவிரவாதிகளின் தாக்குதலால் அப்பகுதியில் இதுவரை சுமார் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

போகோஹரம் தீவிரவாதிகளை ஒழிப்பதற்கான நைஜீரியா நாட்டின் ராணுவ முயற்சியில் சாட், கேமரூன் மற்றும் நைகர் ஆகியவை இணைந்துள்ளன.

இந்நிலையில், சாட் நாட்டின் தபவுவா நகரின் தெற்கே அமைந்துள்ள கிராமம் ஒன்றில் போகோஹரம் அமைப்பினை சேர்ந்த தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் அப்பகுதி மக்கள் 18 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டதோடு., அப்பகுதியில் உள்ள பெண்கள் சிலரையும் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE