பாலிவுட் செல்லும் நடிகை அமலாபால்..!

165

தமிழில் ”மைனா”, ”தெய்வத்திருமகள்”, ”வேட்டை”, ”தலைவா”, ”நிமிர்ந்து நில்”, ”வேலையில்லா பட்டதாரி”, ”திருட்டுப்பயலே-2”, ”பாஸ்கர் ஒரு ராஸ்கல்” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை அமலாபால் தற்போது இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இயக்குனர் நரேஷ் சமீபத்தில் அமலாபாலை அணுகி இந்தி படத்தில் நடிக்க கதை சொன்னார். அது அவருக்கு பிடித்ததால் அந்த படத்தில் நடிக்க சம்மதித்து உள்ளார்.

இப் படத்தில் கதாநாயகனாக, அர்ஜுன் ராம்பால் நடிக்கிறார். இவர் இந்தி பட உலகில் பிரபல நடிகராக இருக்கிறார்.

இந்தி படத்தில் நடிப்பது குறித்து அமலாபால் கூறும்போது.. :-

“இந்தியில் இருந்து கடந்த சில வருடங்களாகவே எனக்கு அழைப்புகள் வந்தன. நல்ல கதாபாத்திரத்துக்காக காத்திருந்தேன். இயக்குனர் நரேஷ் தமிழ் படங்களில் எனது நடிப்பை பார்த்து அவரது கதைக்கு பொருத்தமாக இருப்பதாக என்னை அணுகினார்.

கதையும், கதாபாத்திரமும் எனக்கு பிடித்ததால் ஒப்புக்கொண்டேன். இந்த படம் இந்தியில் எனக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது” என்றார்.

இந்நிலையில், இப்போது இவர் ”ராட்சசன்” என்ற படத்திலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE