யாழில் நடக்க இருந்த பரிதாப சம்பவம் அதிர்ச்சியில் பெண்!!

159

வீதியால் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுக்க முற்பட்டவர்களை அவதானித்த சிலர் அவர்களைத் துரத்த முற்பட்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் கரவெட்டி குஞ்சர் கடையடிப்பகுதியில் நேற்று நடந்துள்ளது.

நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் தலைக்கவசத்தை மூடியவாறு வந்த இருவர் சங்கிலியை அறுக்க முற்பட்ட போது அது அறுபடவில்லை, அவர்கள் மீண்டும் அறுக்க முற்பட்டதும் அங்கிருந்தவர்கள் அவர்களை துரத்தினர். அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

SHARE