கிராமியப் பாலங்களை நிர்மாணிக்கும் செயற்றிட்டமொன்றை ஆரம்பிக்க மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கிராம மட்டத்தில் தற்போது நிலவும் பாதுகாப்பற்ற மற்றும் பாவணைக்கு உதவாத நிலையில் காணப்படும் பாலங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் முழுமையாக அகற்றப்படும்.
இவ்வாறு அகற்றப்படும் பாலங்களுக்குப் பதிலாக புதிய பாலங்களை நிர்மாணிக்கவுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்காக பெல்ஜியம் அரசு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், 9 மாகாணங்களையும் உள்ளடக்கிய வண்ணம் 60 பாலங்கள் அளவில் நிர்மாணிப்பதற்கு இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.