(தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வி)
கேள்வி:- வடமாகாண சபையினுடைய உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்களே வணக்கம். அதாவது வடமாகாண சபையினுடைய சுகாதார அமைச்சர் அவர்கள் கடந்த சில மாதங்களாக அனுமதிப்பத்திரமற்ற பாமசிகளை செயற்பட முடியாமல் நிறுத்தியமை தொடர்பாக பல பிரச்சினைகள் மிகவும் பூதாகரமாகச் சென்று கொண்டிருக்கின்றது. அதில் பல பாமசிகள் மூடப்பட்டுள்ளன. சில பாமசிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளது. நீங்கள் அதற்கான ஒரு வாதப்பிரதிவாதத்திற்கு வரும்படி அவரை அழைத்திருந்தீர்கள். ஆனால் அவர் உங்களுடைய கட்சி சார்ந்தவராக இருந்தபொழுதிலும் அவர் பக்கத்தில் நியாயம் இல்லை என்ற காரணத்திற்காகவோ அல்லது என்னவோ தெரியவில்லை. ஆனால் உண்மையிலேயே அதனுடைய நிலைப்பாடு எப்படி? அதனை எவ்வாறு அமைச்சர் கையாளமுடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்.
பதில்:- வணக்கம். இதிலே நான் சொல்வதாக இருந்தால் கௌரவ சுகாதார அமைச்சர் வைத்தியர் குணசீலன் அவர்களிடம் நான் கேட்டுக்கொண்ட விடயம் நேரடி விவாதத்திற்கு என்று அல்ல அது தவறான விடயம். வடக்கு மாகாண சபையிலே ஒரு இரண்டு மணி நேரம் சுகாதார அமைச்சு சம்பந்தமான விடயங்கள் இன்றைய நிலைமை, சூழ்நிலைகள் எவ்வாறு இருக்கின்றது. நல்ல விடயங்கள், பிழையான விடயங்களை எவ்வாறு எதிர்காலத்தில் மாற்றியமைக்க முடியும் என்ற விடயங்களை கௌரவ உறுப்பினர்கள் கௌரவ பொதுமக்கள் உடைய அபிப்பிராயங்களை மாகாணசபை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தி நாங்கள் அதனூடாக பல விடயங்களுக்கு தீர்வு கண்டிருக்க முடியும். உதாரணமாக நாங்கள் பார்ப்போமாக இருந்தால் இன்றைக்கு இன்னமும் ஒரு மாகாண சபையினுடைய அங்கீகாரம் இல்லாமலே மாகாணத்திற்கு ஒரு பொது மருத்துவமனை தேவை அதனை ஒரு தரப்பு குற்றம் சாட்டுகின்றது. டாக்டர் சத்தியலிங்கம் வவுனியாவிலே அமைத்து வைத்துக்கொண்டு இருக்கின்றார். இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று. ஆனால் அங்கு வவுனியாவில் வைத்துக்கொண்டிருக்கின்ற பொழுது அது அங்கு சிங்கள மயமாகிக் கொண்டிருக்கின்றது. இந்த ஆபத்து இருக்கின்றது.
ஆகவே விடுதலைப்புலிகள் காலத்திலே மாகாணத்திற்கொரு பொது வைத்தியசாலை இருந்தால் அது கிளிநொச்சி மாவட்டத்திலேயே அமையவேண்டும் என்றதொரு நிலமையிலே இருந்தது. நிலைப்பாட்டிலேயே இருந்தது. ஆனால் டாக்டர் சத்தியலிங்கம் அவர்கள் இல்லை அது வைத்திய நிபுனர்களினுடைய பிள்ளைகள் அவர்களுடைய கல்வி அவர்கள் கொழும்புக்கு போய்வருகின்ற காலகட்டங்கள் என்று சொன்னால் இப்பொழுது கிளிநொச்சியிலிருந்து வவுனியாவை ஒரு மணி நேரத்தில் அடையக்கூடியதாக இருக்கின்றது.
ஆகவே இவ்வாறான உட்கட்டமைப்புடைய விடயங்கள் எல்லோருடைய கருத்தும் கேட்கப்பட்டாமல் செயற்படுத்தப்படுவதனுடைய பின் விளைவுகள் டாக்டர் சத்தியலிங்கத்தைப் பொறுத்தவரையில் சரியாக இருக்கலாம் அல்லது பிழையாக இருக்கலாம். ஆனால் அதை மக்கள் பிரதிநிதிகளுடைய கருத்துக்களைக் கேட்டுச் செய்யாது இன்றைக்கு பார்த்தீர்களேயானால் மாகாணசபையினை மாங்குளத்திற்கு கொண்டுபோ அல்லது கிளிநொச்சிக்கு கொண்டு போ என்று ஏனென்றால் வடமாகாணத்துக்கு எல்லா மாவட்டத்திற்கும் மத்தியில் அமையும். யாழ்ப்பாணம் ஒரு தொங்கல். இவ்வாறான ஒரு கருத்துக்கள் இருப்பது போன்று தான். டாக்டர் குணசீலன் அவர்களை நான் பார்த்துக் கேட்டது இரண்டு மணிநேரம் விவாதத்தை நடத்துவம்.
குறிப்பாக அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலே பதிநான்கு மருந்தகங்களை அவர் சீல் வைத்து ஒரு சர்ச்சை எழுந்துள்ள சூழ் நிலையிலே வடக்கு மாகாண சபையிலே சட்டவிரோதமாகச் செய்யுமாறு நான் கூறவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்திலே ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலே அந்த மாவட்டத்தினுடைய ஐந்து மாகாணசபை உறுப்பினர்கள் மொத்த உறுப்பினர்களே ஐந்து உறுப்பினர்கள் தான் அந்த ஐந்து உறுப்பினரகள் இருந்திருக்கின்றார்கள். அந்த மாவட்டத்தினுடையை பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இருந்திருக்கின்றார்கள். அந்த இடத்திலே ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. ஆறு மாத கால அவகாசம் கொடுத்து போரினால் பாதிக்கப்பட்டவர்கள் செய்யுங்கள் என்று. ஆகவே அதைச் செயற்படுத்துவது என்பது பெரிய விடையம் இல்லை. இதுக்கு மத்திய அரசாங்கமோ அவரோ, இவரோ வந்து வழங்குத் தாக்கல் செய்யப்போவது நீங்கள். ஆகவே இதை நீங்கள் செயற்படுத்துக்கள் என்று சொன்னது இப்பொழுது கூட ரெலோவினுடைய அரசியல் குழு இணைந்திருக்கின்றது. தலைவரும் அவிபொது செயலாளர் நாயகமும் டக்டர் குணசீலனுக்கு அறிவுறுத்துவதாகவும் நீங்கள் அதன் படி செய்யுமாறும். கட்சிக்குள்ளே அன்று ஒரு நன்றிக் கூட்டத்திலே நான் தனிப்பட்ட காரணங்களுக்காக அவசர வேலை காரணமாக கொழும்பிலே நின்றபடியால் என்னால் கூட்டத்திற்கு போகமுடியாமல் போய்விட்டது. அதில் அந்த தீர்மானம் எடுப்பட்டுல்லது. எனவே நாங்கள் சொல்வது சட்டவிரோதமான தொழில்களை ஊக்குவிக்கவேண்டும் என்ற கருத்தல்ல. இன்றைக்கு எத்தனையோ இடங்களில் சாராய பார்கள் பாடசாலைக்கு அண்மையிலே 50 மீற்றர் தூரத்திலே இருக்கின்றது. பருத்தித்துறை நகரிலே எத்தனையோ இடங்களில் வடமாகாணத்தில் எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும். அதற்கெல்லாம் இவர்கள் அனுமதி கொடுக்கின்றார்கள் தானே அதனை இவர்களுக்கு இழுத்து மூடுவதற்குத் தெம்பிள்ளை. இதனை விட அந்த உள்ளுராட்சி மன்றம் அவர்களுக்கான உரிமத்தைக் கொடுக்கவிட்டால் மத்திய அரசாங்கம் கொடுத்த அல்லது பிரதேச செயலாளர் கொடுத்து அந்த அனுமதிப்பத்திரத்தை வைத்து அவர் ஒன்றும் செய்யமுடியாது.
வியாபாரத்தை திறந்து விற்பதுக்கு அந்த இடம் கொடுக்க வேண்டும். நீங்கள் ஒரு மருந்தகத்தை அமைப்பதாக இருந்தால் மாகாண சுகாதார அமைச்சகத்திலே இருந்து மருந்தகத்தை அமைப்பதற்கான அனுமதியினைப் பெறமுடியும். அதனை சுகாதார நிலமையாக இருக்கின்றதா? இல்லையா? என்பதனைப் பார்ப்பதற்கு அந்த உள்ளுராட்சி மன்றம் கரைத்துறைப்பற்று பிரதேச சபை அனுமதி கொடுக்காமல் ஒருவர் மருந்தகத்தையோ அல்லது தேநீர் கடையையோ நடத்த முடியாது. இதான் நிலவரம் ஆகவே இதனை நாங்கள் மாற்ற வேண்டும் என்று கூறவில்லை. இதனை கிளினிக் சேவைகளில் இருப்போருக்கு கொடுப்பம் என்றால் கிளினிக்கில் இருப்பவர்கள் கிராமங்களில் அல்லது நடுத்தரமான இடங்களில் டாக்டரே கொடுக்கின்றார். அல்லது சில சில மருந்துகளை வைத்திருப்பார் சில மருந்துகளை கடையிலே வாங்கச்சொல்லுவார். சிலதை பக்கத்திலே இருக்கக் கூடிய உதவியாளர்கள் மடித்தோ, போத்தலில் விட்டோ கொடுப்பார்கள் இதுவே சட்டவிரோதமானது. டாக்டர் தன்ர கையாலே கொடுக்க முடியாது. ஒரு அங்கீகரிக்கப்பட்ட பாமசியால் தான் மருந்தே கொடுக்க முடியும். வேணுமென்றால் டாக்டர் ஒரு ஊசி மருந்தினைப் போடலாம் அவ்வளவு தான். அவர் ஒரு மருந்தை எழுதுவதாக இருந்தால் அது பனடோலாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் அதனைக் கொடுக்கவேண்டியது ஒரு மருந்துக் கலவையாளர். அவர் ஒரு பயிற்சி பெற்றவராக இருக்கவேண்டும். ஆனால் இன்றைய சூழ் நிலை என்ன பல வைத்தியசாலைகளில் சிற்றுழியரை வைத்துத்தான் மருந்து கொடுக்கவேண்டிய கட்டத்திலே இருக்கின்றோம் நாங்கள். ஆட்கள் அணி இல்லாத சூழ்நிலை இதுகளைப் புரிந்து கொள்ளவேண்டும். இதனை இலங்கை பூராக நாங்கள் பார்ப்போமாக இருந்தால் ஒரு மருந்துக் கலவையாளரினுடைய பெயரிலே, ஒரு பாமசியினுடைய பெயரிலே, மருந்தாளருடைய பெயரிலோ அனுமதி பெறப்பட்டிருக்கும் ஆனால் அங்கே இருப்பவர்கள் அவருடைய மனைவி, பிள்ளைகள், அங்கு வேலை செய்யும் நான்கு சிற்பத்திகள் தான் நின்று மருந்து கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இது பொதுவாக நடந்து கொண்டு இருப்பதாக அமைச்சரே தன்னுடைய உரையிலே குறிப்பிட்டிருக்கின்றார்.
கேள்வி:- ஏற்கனவே இருந்த சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் அவர்கள் அமைச்சராக நான்கு வருடங்கள் இருந்திருக்கின்றார். ஏன அவர் இதனை நடைமுறைக்குக் கொண்டு வரவில்லை. அதனை ஏன் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். அவருக்குத் தெரியாத இப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கின்றது. சட்டவிரோதமாக பாமசிகளை வைத்திருந்து மருந்துகளைக் கொடுக்கின்றார்கள் இதனால் சமூகத்திலே பாதிப்பு ஏற்படப்போகின்றது. போன்ற விடையங்கள் அவருக்குத் தெரியாமல் இருக்கும் என்று நினைக்கின்றீர்களா?
பதில்:- இல்லை அவருக்கும் இங்கிருக்கக் கூடிய குறைபாடுகள் நிறைபாடுகள் எல்லாவற்றையும் அவர் நூறு வீதம் அவர் சரியாகச் செய்திருந்தார், அல்லது செய்ய முடிந்தது என்று சொல்லியிருந்தால் தான் அடுத்த கேள்வி கேட்க முடியும். குறைபாடுகள் இன்றைக்கு சுமார் வடமாகாணத்தில் இருக்கக் கூடிய நூறு வைத்தியசாலைகளிலே இருபத்தெட்டு வைத்தியசாலைகளில் ஒரு வைத்தியர் கூட இல்லை. ஒரு வைத்தியர் மூன்று அல்லது நான்கு வைத்தியசாலைகளைப் பார்க்கவேண்டியிருக்கின்றது. அல்லது வாரத்திற்கு ஒரு வைத்தியசாலையில் இரண்டு நாள் மூன்று நாள் தான்; வைத்தியர் அங்கு இருப்பார். அது மட்டும் ஒரு மனிதனுக்கு நோய் வராமல் இருக்குமா? என்ற கேள்வி எல்லாம் எழுகின்றது. இதப்போன்று தாதியருக்கான பற்றாக்குறை சிற்றுழியருக்கான பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சினைகள் இருக்கின்றது. இதுக்குள்ளே எவ்வாறு இதனை மீழ்வதென்பது கட்டம் கட்டமாகத் தான் முன்னேறவேண்டும் நாங்கள் முழுப்பழியையும் அமைச்சர் மீதோ, அல்லது சுகாதார அமைச்சு மீதோ போட்டுவிட்டு இருக்கமுடியாது. மத்திய அரசாங்கம் பல உதவிகளைச் செய்தாலும், அவர்கள் தரப்பிலும் பலவிதமான விடையங்களிலே ஒரு தேவையில்லாத, ஒரு வேண்டா வெறுப்பான நடவடிக்கைகளும் கீழ் மட்டங்களில் இருப்பதை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
இன்னொரு விடயம் எல்லாவற்றுக்கும் மேலாக எங்களுடைய ஊடகங்கள் சரி எல்லோரும் குரல் கொடுக்க வேண்டிய விடயம் எங்களுடைய வைத்தியர்கள் எங்களுடைய மண்ணிலே கடமையாற்றுவது இல்லை. இது மிகவும் ஒரு பாரதூரமான விடயம். பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது நான் இது சம்பந்தமான முயற்சிகளை பகிரங்கமாக பாராளுமன்ற விவாதத்திலே கேட்டிருந்தேன். மாகாணசபை விவாதத்திலும் கேட்டிருக்கின்றேன். ஒருவர் உதாரணமாக வவுனியா மாட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படுவார் மாவட்ட கோட்ட அடிப்படையிலே. கிளிநொச்சியிலிருந்து, முல்லைத்தீவிலிருந்து அவர் ஆகக்குறைந்தது அந்த மாவட்டத்திலே ஒரு வருடமாவது கடமையாற்ற வேண்டும் என்று ஏன் பணிக்க முடியாமல் இருக்கின்றது மத்திய அரசாங்கத்தால். ஏன் எங்கள் ஒருவராலும் கேட்க முடியாமல் இருக்கின்றது. நீங்கள் அதற்குப் பிறகு மேல் படிப்புக்குப் போங்கள், வெளிநாட்டுக்குப் போங்கள் எங்களுக்கு அதைப் பற்றிப் பிரச்சனை இல்லை. போர்க்காலத்திலே ஐந்து வருடம் படிக்கவேண்டிய கல்வி கற்கைக் காலம் ஆறு, ஏழு, எட்டு வருடங்களாக நீடித்ததும் உண்டு. ஆனால் இப்போது அந்தச் சூழ்நிலை இல்லை. திறமை அடிப்படையிலே சித்தியடைபவர் வேண்டுமென்றால் அவர் எந்த மாவட்டம் என்று நாம் கண்டிக்கத் தேவையில்லை. அது அவருடைய விருப்பமாக இருக்கட்டும். மாவட்டத்தில் மக்களுடைய அந்த இலங்கை மக்களுடைய வரிப்பணத்திலே இலவசக் கல்வியை முடித்துவிட்டு அந்த மாவட்டத்திலே மக்களுக்கு கிடைக்கக் கூடிய அன்று ஒரு கூட்டத்தில் நான் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு வைத்தியர் சொன்னார் என்பது பேர் வரை இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வெளியேறி இருக்கின்றார்கள் வைத்தியராய். தற்பொழுது அங்கு மூன்று பேர் தான் கடமையாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். நான் சொல்வது இவ்வளவு காலங்களிலே. ஒரு வருடத்தில் மூன்று பேர் ஐந்து பேர் என்றால் அடுத்த வருடம் புதிதாக வருபவர்கள் வேலை செய்யட்டும். அப்படியென்றால் ஓரளவு எமது மக்களுக்கு போதுமானதாக இருக்கும். சில உதவி வைத்தியர்கள் இன்றைக்கு ஏழுபத்தைந்து வயதைக் கடந்த நிலையில் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களும் வேலை செய்யமுடியாத சூழ்நிலை அல்லது இயற்கை மரணம் அல்லது மரணத்தை தழுவுகின்ற பொழுது வேறு ஒரு மாற்று வழி இல்லாமல் இருந்து கொண்டிருக்கின்றது. இதேபோலதான் தாதியர்களின் நிலைமைகளும் தென்னிலங்கையிலிருந்து நிறையபேர் வந்து கொண்டிருக்கின்றார்கள். எங்களது பிள்ளைகள் தாதியர்கள் தொழிலுக்கு அல்லது விஞ்ஞான பிரிவுக்கு போகாத காரணத்தால் இதனைப் பெறமுடியாமல் இருக்கின்றது. பாமசிஸ்டாக் கூட பல மருத்துவமனைகளிலே சிங்களவர்கள் தான் வந்து கொண்டிருக்கின்றார்கள். ஏனெனில் எங்கடை ஆட்கள் விஞ்ஞானப் பிரிவைக் கற்பது இல்லை.
கேள்வி:- தற்பொழுது அமைச்சர் குணசீலன் அவர்கள், அதாவது சட்டவிரோதமாக இயக்குகின்ற பாமசியை இழுத்து மூடவேண்டும் என்ற இந்த முடிவு பிழை என்று கூறுகின்றீர்களா?
பதில்:- ஆம் என்னைப் பொறுத்தவரையிலே அவர் அந்த நடவடிக்கை எடுத்திருந்தாலும், இன்னொரு விடயத்தை நான் கேட்க விரும்புகின்றேன். மூடுமாறு சொன்னவுடன் பலர் மருந்தகங்களை மூடியிருக்கின்றார்கள். மூடியதன் பின்னர் இரண்டு பாமசிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னணி என்ன? ஒருவரை வந்து சரணடைந்த பின்னர் கைது செய்வது போன்றல்லவா இருக்கின்றது. சரணடைந்த பின் கைது செய்வது இல்லை. அது சரண்டர் இப்ப பாரம் எடுப்பது தான் வேலை. ஆகவே அது போன்றதொரு நிலைமையைத் தான் ஒரு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு மத்திய அரசாங்கத்தினுடைய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும், வடமாகாணத்திலே கௌரவ முதலமைச்சரோ அமைச்சர்களோ ஐந்து மாகாணசபை உறுப்பினர்களும் இருந்திருக்கின்றார்கள். ஆகவே அந்த இடத்திலே இப்படியென்றால் எவ்வாறு நீங்கல் சொல்ல முடியும் நான் கிளினிக்கைப் போட்டு அதிலே தற்காலிகமாக இருப்பவர் மருந்தைக் கொடுக்கட்டும் என்றால் கிளினிக்கில் இருக்கும் யாராவது ஒருவருக்கு பாமர்சி லைசன்ஸ் இல்லாமல் செய்ய முடியாது. இவர் தான் அதற்கு ஒரு தீர்வைச் சொல்ல வேண்டும்.
அல்லது நடமாடும் சேவை மாதிரி இரண்டு மூன்று மணித்தியாலத்திற்கு ஒவ்வொரு இடத்திற்கும் செல்வதற்கு தயாரா? இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும.; ஆகவே நடைமுறை என்று ஒரு விடயத்தைப் பார்க்காமல் நான் ஏதோ சரியா நடவடிக்கை எடுக்கின்றேன் என்றுவிட்டு இது ஒரு பிரச்சனையாக்கி இதைப்போன்று பல இடங்களிலே மன்னாரிலே இதேபோன்று வவுனியா மாவட்டத்தில், யாழ்ப்பாணத்தில் கூட அனுமதியில்லாத பாமசிகள் இயக்குவதாக கௌரவ அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார். அப்படியென்றால் அதிலே மருந்து வாங்குகின்றவரின் உயிர்ச் சேதத்துக்கு யார் பொறுப்பு? இந்தக் கேள்வி எழுகின்றது. ஆகவே இது ஒரு நூறு வீதமான விடயத்தைச் செய்கின்றது என்பது முடியாத காரியம். அதை நோக்கிச் செய்கின்றதை நாங்கள் தடுக்கக்கூடாது.
கேள்வி:- அப்படியென்றால் இவர் ஒரு அடுத்த கட்ட ஒரு அரசியல் நகர்வை அல்லது அடுத்த கட்ட மாகாண சபையிலே தான் ஒரு அமைச்சராகவோ அல்லது உறுப்பினராகவோ வரவேண்டும் என்ற இலக்கை நோக்கி இவ்வாறான தொழிற்பாட்டை செய்கின்றார் என்பதைப்போல் உங்களால் அவதானிக்க முடிகின்றதா?
பதில்:- இல்லை அது அவருடைய விருப்பம் அவர் என்ன இலக்கை நோக்கிச் செல்கின்றார் இல்லை என்பது அல்ல அவர் ஒரு வைத்திய கலாநிதி சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றுகின்றார். ஆகவே அவர் தொடர்ந்து அரசியலிலே நீடிப்பதோ நீடிக்கவில்லையோ என்பதும் அவர் தொடர்ந்து தனது இலக்கை நோக்கிச் செல்வது என்பது அவரது தனிப்பட்ட சுதந்திரம். ஆகவே அவர் இலக்கை நோக்கி நகர்வது என்பதை நாங்கள் பிழையென்றும் சொல்ல முடியாது. எங்களுடைய நோக்கம் ஒரு விடயத்திலே ஒரு மக்கள் பிரதிநிதிகள் ஒரு தீர்மானம் வருகின்றது என்றால் அதற்கு நாங்கள் ஒத்து இசைந்ததாகத் தான் செல்லவேண்டும். ஆரம்பத்திலே சுனாமி வந்தபொழுது முந்நூறு கிலோமீற்றருக்கு யாரும் குடியிருக்க முடியாது என்று அன்றைய ஜனாதிபதி கௌரவ சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பணித்திருந்தார். நாங்கள் போராடி இல்லை 50 மீற்றர் 100 மீற்றர் தூரத்திற்குள்ளே இருக்க வேண்டிய தேவை இருக்கின்றது என்று தளர்த்தப்பட்டிருக்கின்றது. ஆனால் இன்னும் சட்ட புத்தகத்தில் 300 மீற்றர் என்பது ஒரு பாதுகாப்பு வலயம் என்பது இருக்கின்றது. அதற்கான கட்டிட அனுமதி பெறுகின்ற நாங்கள் விசேடமா பெறவேண்டியிருக்கின்றது. ஆனால் தளர்வு என்பது ஒரு சில விடயங்களில் தளர்த்தப்படுகின்றது. அது போலத் தான் தற்காலிக அனுமதிப் பத்திரத்தைக் கொடுத்து அல்லது வேறு ஒரு விடயத்தைச் செய்து சாதாரண மருந்துகளைக் கொடுக்குமாறு பணித்தால் கூட பரவாயில்லை. இந்தியாவிலே பல இடத்திலே கொழும்பிலே அதாவது பாரதூரமான மருந்துகளையோ ஊசிகளையோ தனியாக வைத்திருப்பார்கள். அதைக் கொடுக்கின்ற பொழுது வேறு யாராவது பாமசியர் இல்லையென்றால் அது பாரதூரமான குற்றமாகும். அதுபோல் அப்படியானதைக் கொடுக்கவேண்டாம். அதைவிட்டுப்போட்டு கருத்தடை மாத்திரைகளை வைத்திருக்கின்றார் அதை வைத்திருக்கின்றார் இதை வைத்திருக்கின்றார் என்று எழுந்தமானமான குற்றச்சாட்டுக்களை சொல்வதென்பது மருந்தகங்களை வைத்திருப்பவர்களைப் பாதிக்கின்றது.
கேள்வி:- கருத்தடை மாத்திரைகள் முல்லைத்தீவில் இருந்து தான் கடத்தப்படுகின்றது என்று கூறப்படுகின்ற விடயத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்:- முல்லைத்தீவில் என்ன தொழிற்சாலை இருக்கின்றதா? கருத்தடை மாத்திரைகள் கடத்துவதற்கு. இல்லை கடத்தப்படுதல் என்றால் கொழும்பிலிருந்து, இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டு வருகிறது. வடக்கிலிருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து தான் கடத்தப்படுகின்றது என்றால் யாழ்ப்பாணத்தில் உற்பத்தி தொழிற்சாலை இருக்கவேண்டும் அல்லவா? சிந்திக்க மறந்து விடுகின்றார்கள். இவர்கள் சொல்வது போன்று தொழில் நுட்பம் இருந்தால் ஏன் பதினான்கு மருந்தகங்களும் ஒரு மருந்தாளரை சட்டப்படி விண்ணப்பித்து எடுக்க முடியாமல் நடத்த முடியாமல் இருக்கின்றனர். அவர்களுக்கான காலக்கெடுவைக் கொடுத்து இறுக்கமான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து மக்களுக்கு சீரான பாதுகாப்பான சுகாதார வசதியைச் செய்து கொடுப்பதென்பது இவர்களது கடமை.
கேள்வி:- ஏனைய மாவட்டங்களில் இந்தச் சட்டங்கள் பாய்ச்சப்படவில்லை. ஆனால் முல்லைத்தீவிலே தான் குறிவைத்து இந்த விடயத்தை எடுத்ததாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இதுபற்றி உங்களது கருத்து என்ன?
பதில்:- இல்லை முல்லைத்தீவிலே அங்குள்ள சர்ச்சையை நீங்குவதற்கு போய் சரியாகவோ பிழையாகவோ ஈடுபட்டிருக்கின்றார் என்பது அதாவது ஏன் ஒரு வடக்கின்ற சுகாதார அமைச்சர் ஏன் முல்லைத்தீவுக்குப் போனார் என்று நாங்கள் கேட்க முடியாது. அது அவருடைய விவகாரம் ஆனால் அவர் பிடிவாதமாக நிக்கின்ற பொழுது அதிலே பல விதமான சந்தேகங்கள் மங்கள் மத்தியிலே அல்லது மருந்தகங்களை நடத்துகின்றவர்கள் மத்தியிலே எழுவதற்கான காரணங்கள் இருப்பதையும் கௌரவ அமைச்சர் புரிந்து கொள்ளவேண்டும்.
கேள்வி:- அதாவது கிட்டத்தட்ட ஒரு பாமர்சியை நாங்கள் உருவாக்குவதற்கு ஒரு கோடி அல்லது எழுபத்தைந்து லட்சம் அப்படித்தான் அதற்குரிய முதலை நாங்கள் விட்டிருக்கின்றோம் என்று கூறுகின்றார்கள். இதனால் பலர் கடன்பட்டு தங்களுக்கு அன்றாடம் பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று கூறுகின்றார்கள். இதற்கான சுமுகமாக தீர்வைப் பெற்றுக் கொள்ளும் வகையிலே அமைச்சர் அவர்களுக்கு நீங்கள் அவருக்கு சொல்லக்கூடிய அறிவுறை அல்லது அதனை எப்படித் தீர்க்க முடியும் என்று நீங்கள் கூறுகின்றீர்கள்?
பதில்:- என்னைப்பொறுத்தவரையிலே கௌரவ அமைச்சர் கட்சி ரீதியாக அவர் ஒரு உறுப்பினர் என்ற ரீதியிலே பார்த்தால் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ ஆலோசனையை கௌரவ ரெலோவினுடைய தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும், கௌரவ சிறீக்காந்தன் சட்டத்தரணி முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் இது சம்பந்தமாக அவருடன் நேரிலே பேசவேண்டும் என்று அரசியல் குழு பணித்திருக்கின்றது. அந்த வகையிலே அவர்கள் பேசினார்களா? இல்லையா? என்று இன்னும் இரண்டொரு நாளில் நடைபெற இருக்கின்ற தலைமைக்குழு கூட்டத்திலே டாக்டர் குணசீலனும் ஒரு தலைமைக் குழு உறுப்பினர் ஆகவே எங்களுக்கு அதில் பல விடயங்கள் தெரியவரும். எது எப்படி இருந்தாலும் வடக்கு மாகாணசபையினுடைய அந்த கௌரவ அமைச்சர் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலே இருக்கக்கூடிய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இருக்கக்கூடிய அந்தத் தீர்மானத்தை தற்காலிகமாக சில மாதங்களாவது பின்பற்றவேண்டும். இப்ப ஆறு மாதம் என்று தீர்மானித்ததை அல்லது எனக்கு கஸ்டமாக இருக்கின்றது. மக்களுடைய நலனுக்காக மூன்று மாத்தில் செய்ய வேண்டும். மக்களுடைய நலன் என்று சொன்னால் கூட அது ஒரு அளவு ஏற்றுக்கொள்ள முடியுமே ஒழிய அதனை விடுத்து ஒரு நாளும் இல்லை நாங்கள் மூன்று மாதமும் பூட்டித் தான் இருக்க வேண்டும் என்றால் அப்பாவி மக்கள் சாதாரண மக்கள் மிகவும் கஸ்டப்படுவார்கள். மருந்து என்று வாங்குவதற்கு பரந்தனுக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் வவுனியா மாவட்டத்திற்கு வரவேண்டும். இந்த மாதிரியான நெருக்கடியான சூழ்நிலையில் மக்கள் இருக்கின்றார்கள்.
கேள்வி:- நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்ற பொழுது அதனை மீண்டும் பரிசீலனை செய்து பாமசிகளைத் திறக்க முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?
பதில்:- இல்லை இல்லை. இப்பொழுது நீதிமன்றத்தில் ஒரு வழக்குப்போட்டால் வழக்கைத் தாக்கல் செய்தவர் வாபஸ் பெறமுடியும். அதனைவிட நீதிமன்றத்திலேயே சொல்ல முடியும் இன்றிலிருந்து எமது கோரிக்கையின் அடிப்படையில் அவர்கள் மூடியிருக்கின்றார்கள். ஆகவே நாங்கள் இந்த வழங்கை வாபஸ் பெறுகின்றோம் என்று. நீதிமன்றம் கேட்கும் வழக்கை ஏன் நீ வாபஸ் பெறுகின்றாய் என்று. அந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டியவர்கள் எனக்குத் தெரியாது. அவர்கள் தான் வழக்குப்போட்டிருக்கின்றார்கள் என்று. அப்போது அந்த சுகாதார அமைச்சர் என்னத்துக்கு சுகாதார அமைச்சருக்குக் கீழ் தான் அந்த ஒரு உத்தியோகத்தர் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார் என்றால் உதாரணத்துக்கு வவுனியா நகரசபையை எடுத்துக் கொள்வோம். நகர சபையினுடைய ஒரு உத்தியோகத்தர் ஒருத்தருக்கு எதிராக வழக்குத் தொடுத்திருந்தால் தலைவர் அதனை மீளப்பெறுமாகச் சொன்னால் அவர் அதனை மீளப்பெறத்தான் வேண்டும். அதிலே இருக்கக்கூடிய பிழை சரியை வேறு யாரும் பார்க்க வேண்டும். அதில் இருக்கக்கூடிய உள்ளுராட்சி ஆணையாளரோ அல்லது வேறு யாரோ பார்க்க வேண்டுமே ஒழிய, அவர் உறுப்பினர் போட்டிருக்கின்றார் எனக்குத் தெரியாது என்று தலைவர் சொல்லுகின்றார் என்றால் அவர் எப்படி நிறைவேற்று அதிகாரத்தில் இருப்பார். ஒரு கௌரவ அமைச்சர் சொல்லுகின்றார் என்றால் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து அல்ல.
நன்றி.