புகையிரதம் மோதி புகையிரத கடவை காப்பாளர் பலி

159

தலைமன்னாரில் இருந்து நேற்று திங்கட்கிழமை(23) இரவு கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி புகையிரத கடவை காப்பாளரான (காவலாளி) குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (23)திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் உயிர்த்தராசன் குளம் புகையிரத கடவையில் இடம் பெற்றுள்ளது. குறித்த புகையிரத கடவையில்  கடவை காப்பாளராக (காவலாளி) கடமையாற்றிய மாளிகைப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் முருகன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டதோடு சடலத்தை மீட்டு மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
SHARE