புதிய உலக சாதனை படைத்து இலங்கைக்கு பெருமை சேர்த்த தமிழருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து நேற்று முற்பகல் இலங்கையின் இசைக்கலைஞரும், பல்கலைக்கழக விரிவுரையாளருமான ஆரூரன் அருணந்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்தார்.
ஆரூரன் அருணந்தி 40 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக கர்நாடக சங்கீத இசைக்கச்சேரி செய்து புதிய உலக சாதனை படைத்திருந்தார்.
மேலும், அதிநீள கர்நாடக இசைக்கச்சேரி சாதனை முயற்சியை முன்னெடுத்த முதல் இலங்கையர் என்ற பெருமை இவரையே சாரும் என அரச ஊடகமொன்று சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.