மாகாண நிதியொதுக்கீட்டில் வவுனியா வடக்கில் வீதிகள் திருத்த பணிகள் ஆரம்பம்

151

வவுனியா வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட உள்ளக வீதிகள் புனரமைக்கும் பணிகள் வவுனியா வடக்கு பிரதேச சபையால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. வடக்கு மாகாண சபை உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் வேண்டுகோளிற்கமைவாக வடக்குமாகாண சபையால் ஒதுக்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடைநிதியில் முதற்கட்டமாக மூன்று வீதிகள்திருத்தப்படவுள்ளன. மருதோடை உஞ்சால்கட்டி வீதி, கிரிசுட்டான் வீதி, பனைநின்றான் வீதி என்பனவே திருத்தப்படவுள்ளன. 10 மில்லியன்ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது

நேற்று முன்தினம் மருதோடையில் நடைபெற்ற வீதிதிருத்த ஆரம்ப நிகழ்வில் வ.மா.ச உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், மா.ச.உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.தணிகாசலம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும்கலந்துகொண்டனர்.

SHARE