நோட்டன் பிரிஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்
ஆசிரியர் தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கவிருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காளிகமான நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் செயலாளர் ஆர் சங்கரமணிவண்ணன் தெரிவித்தார்.
25.07.2018 ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் வழங்கப்படவிருந்த 1014 பேருக்கான நியமனம் நிறுத்துவதாக அறிவித்ததையடுத்தே மேற்படி போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் அரசியல் பழி வாங்கும் வகையில் வழங்கபப்படவிருந்த நியமத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 26.07.2018 நாடளவிய ரீதியில் ஆசிரியர் தொழிற்சங்கங்ளினால் சுகவின விடுகை போராட்டமொன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த போராட்டத்திற்கு மலையக பெருந்தோட்ட ஆசிரியர் தொழிற்சங்கங்கள்தமது ஆதரவை வழங்க முன் வந்தது.

இந் நிலையில் 25.07.2018 ஜனதிபதி மாளிகையில் கல்விசார் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் தெரிவு செய்யப்பட்டுள்ள நியமன பெயர் பட்டியலில் தகுதியற்றவர்களின் பெயர் உள்வாக்ககப்ப.டுள்னவா என்பதை அறிய மூரடங்கிய குழுவை நியமிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில் மேற்படி போராட்டம் கைவிபட்டப்பட்டுள்ளதாக சங்கரமணிவண்ணன் தெரிவித்தார். மேலும் போராட்டத்திற்கு ஆதரவு நல்க முன்வந்த ஆசிரியர்
க ல்விச் சமூகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
