பொதுவாகவே பலருக்கும் ஆரஞ்சு பழம் என்றால் பிடிக்கும், சுண்டி இழுக்கும் அதன் நிறம், புளிப்பு சுவை என அதன் ருசியை பலரும் ரசித்து சாப்பிடுவார்கள்.
பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் விதைகளை தூக்கியெறிந்து விடுவோம், இனி அப்படி செய்ய வேண்டாம்.
ஏனெனின் அதன் விதைகளில் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன, இவை உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இதற்கு காரணம் ஆரஞ்சு விதைகளில் உள்ள பல்மிடிக், ஓளிக் மற்றும் லினோலிக் அமிலங்கள்.
மேலும் இதன் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், கேக் மற்றும் இதர உணவுகளில் சுவையூட்டியாக பயன்படுகிறது.
குளியலறையின் பாத்டப்பில் இந்த எசென்ஸை பயன்படுத்தினால் சிட்ரஸ் நறுமணத்தை பெற முடியும்.
இதுதவிர கூந்தல் பராமரிப்புக்கு சிறந்த கண்டிஷனராக பயன்படுகிறது, இதன் விதைகளில் உள்ள விட்டமின் சி மற்றும் பயோ ப்லேவனைடு தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ஆரோக்கியமான கூந்தலை பெற உதவுகிறது.
அத்துடன் மெஷின்களில் உள்ள கிரீஸை சுத்தம் செய்யவும், உலோகம் மற்றும் பாத்திரங்களைச் சுத்தம் செய்யவும் சிறந்த முறையில் இந்த எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.