திருமணம் செய்துகொள்வதாக ஆசை காட்டி குடும்பத்தினருடன் சேர்ந்து பல இனைஞர்களை ஏமாற்றி 88 லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் நடிகை சுருதி.
இவர் ஆடி போனா ஆவணி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இந்த நடிகை மற்றும் அவரது குடும்பத்தினர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளனர். கோவை மத்திய சிறையில் இருந்து அவர் நேற்று முந்தினம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தினமும் கோர்ட் மற்றும் சைபர் கிரைம் போலீசில் ஆஜராகி அவர் கையெழுத்திட்டு வருகிறார்.