பணி முடிவடைந்து வீடு திரும்பிய மாவட்ட செயலக உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி!

119
Image

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் மீது வான் மோதியதில் வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா தோணிக்கல் ஆலடி வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றது.

பணி முடிவடைந்து வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த வவுனியா மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரக்கிளையின் உத்தியோகத்தரான சு. ஜெயசீலன் மீதே அரசசார்பற்ற நிறுவனமொன்றின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வந்து மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற மாவட்ட செயலக உத்தியோகத்தர் காலில் முறிவுக்காயம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகைள வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE