விக்னேஸ்வரன் சந்திக்க மறுத்தமைக்கு இதுதான் காரணம்: கோத்தா விளக்கம்

152

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தம் காரணமாகவே வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தம்முடன் மேற்கொள்ளவிருந்த சந்திப்பை இரத்து செய்தார் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களுடன் நேற்று மாலை கொழும்பில் நடத்திய சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர்,

யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு, கிழக்கில் யுத்த பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களினது அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்குமான அவசியம் இருந்தது.

எனினும், அரசியல் சார்ந்த விடயங்களுக்கு அப்பால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த பேச்சுவார்த்தைக்கும் வரவில்லை.

இந்த நிலையில், முன்னாள் பாதுகாப்பு படைத் தளபதி உதய பெராராவின் ஊடாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்திப்பதற்கான முயற்சி என்னால் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கமைய, ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை 2.30 மணிக்கு சீ.வி.விக்னேஸ்வரன் சந்திப்பதற்கான காலம் குறிக்கப்பட்டிருந்தாலும், அன்றையதினம் பிற்பகல் 2.00 மணிக்கு அந்த சந்திப்பை அவர் இரத்து செய்துவிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தத்தின் காரணமாகவே அவர் இந்த சந்திப்பை இரத்து செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

SHARE