கோதுமை மா, பெரிய வெங்காயம் உட்பட சில பொருட்களுக்கு வரி அறவிட அரசாங்கம் திட்டம்

167

எதிர்காலத்தில் கோதுமை மாவிற்கு விசேட வரியொன்றை விதிக்க திட்டமிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெளிநாடுகளில் இருந்து தருவிக்கும் பழவகைகள், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோளம் போன்றவற்றிற்கும் எதிர்காலத்தில் வரி அறவிட இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுளார்.

விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்படுவதாக விவசாய அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு தேவையான கோதுமையை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் பெருமளவு நிதியை செலவிடுகிறது. இந்த நிலையில், விசேட வரி விதிக்கப்படுவதினூடாக இந்த செலவை குறைக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

விவசாயிகளிடம் இருந்து நியாயமான விலைக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு விசேட திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு சகல பிரதேசங்களிலும் தேவையான ஏற்பாடுகள் முன்னெடுத்திருப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

SHARE