இலங்கை மக்கள் இன்று முதல் பாரியதொரு நெருக்கடி நிலைக்கு முகங்கொடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறையின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் பாரிய தொழில்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன.
ரயில் என்ஜின் சாரதிகள், பொறுப்பதிகாரிகள், ரயில் கட்டுப்பாட்டாளர்கள் உட்பட பல்வேறு பிரிவை சேர்ந்த தொழிற்சங்கங்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளன.
இந்தத் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என ரயில்வே என்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடம்கொட தெரிவித்துள்ளார்.
பணி பகிஷ்கரிப்பு காரணமான அனைத்து ரயில்களும் பயணிக்காதென அவர் குறிப்பிட்டுள்ளார். மேலதிக ரயில் தேவை தொடர்பில் அதிகாரிகள் இதுவரை கோரிக்கை விடுவிக்கவில்லை என ரயில் என்ஜின் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
பலர் தங்கள் போக்குவரத்து தேவையை நிறைவேற்றி கொள்ளும் ரயில் போக்குவரத்தினை பயன்படுத்தி வருகின்றனர். எமது சேவைகள் தடைப்பட்டால் மக்களுக்கு பாரிய நெருக்கடி நிலை ஏற்படும்.
இதனை கருத்திற்கு கொண்டு போக்குவரத்து அமைச்சு சரியான தீர்வினை வழங்க வேண்டும் என ரயில்வே தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
“நாட்டை நேசிக்காத அரசாங்க சேவைகள் உள்ள வரை இவை இப்படி தான் இருக்கும்” என பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
பொது பேருந்து சேவையை எதிர்வரும் காலங்களில் மேலும் வலுப்படுத்துவதாகவும், பேருந்து சேவையில் பழக்கம் ஏற்படுத்தி கொள்ளுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பேருந்து மூலமான போக்குவரத்தினை விட, ரயில் ஊடான போக்குவரத்தில் அதிகளவான மக்கள் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.