ஜனாதிபதி தேர்தலில் போட்டி? முதல் தடவையாக சங்கா வெளியிட்ட தகவல்

174

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்கார போட்டியிட உள்ளதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதற்காக சமூக வலைத்தளங்களில் வாக்கு சேகரிப்புகளும் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் அண்மையில் வெளிவந்த ஆங்கில பத்திரிகைச் செய்தி ஒன்றை அடிப்படையாக வைத்து டுவிட்டர் தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்த கருத்துக்கு சங்கக்கார பதிலளித்துள்ளார்.

இவருடைய அரசியல் பிரவேசம் குறித்து பல தகவல்கள் வெளிவந்த போதும் இது குறித்து முதல் தடவையாக சங்கக்கார கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில், “நான் அரசியலுக்கு வருவதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. யார் இந்த செய்தியை வெளியிட்டது. எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இது உண்மையில் எனது வார்த்தைகள் இல்லை” என சங்க பதிலளித்துள்ளார்.

அண்மையில் பாகிஸ்தானில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இன் இன்சாப் கட்சி 116 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையிலேயே, இலங்கையிலும் கிரிக்கெட் வீரர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிகமாக பேசப்படுகின்றது.

SHARE