3ஆவது நாளாக தீவிர கண்காணிப்பில் கருணாநிதி! ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல்

178

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு காவேரி வைத்தியசாலையில் இன்று 3ஆவது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீவிர சிகிச்சைகளுக்கு பின் கருணாநிதியின் உடல்நிலை தற்போது இயல்பு நிலையை அடைந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு திடீர் என்று இரத்த அழுத்தம் அதிகமாகி பிரச்சினை ஏற்பட்டு பின் குணமாகியது.

அதைத் தொடர்ந்து கருணாநிதி காவேரி வைத்தியசாலையில் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

இதனால் தொண்டர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி, வைத்தியசாலைக்கு முன்பாக கூடி வருவதுடன், அரசியல் தலைவர்களும் கருணாநிதியை பார்வையிட வைத்தியசாலைக்கு வருகைத்தந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், தி.மு.க தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டு இருக்கும் காவேரி வைத்தியசாலைக்கு முன் தொண்டர்கள் யாரும் கூட வேண்டாம் என தமிழக பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது தடுப்பு வேலிகள் அமைத்து, ஒலிப்பெருக்கி மூலம் “காவேரி வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்” எனவும், தி.மு.க தொண்டர்களை கலைந்து செல்லவும், தி.மு.க தொண்டர்களுக்கு ஒலி பெருக்கி மூலம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

SHARE