இந்திய பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு மேலும் சிக்கல் ; ஐரோப்பிய யூனியனையடுத்து சவுதி அரேபியா நடவடிக்கை

185
இந்திய பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு மேலும் சிக்கல் ; ஐரோப்பிய யூனியனையடுத்து சவுதி அரேபியா நடவடிக்கை
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாஸ்மதி அரிசி ரகங்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் பூச்சிமருந்து தென்பட்டதாக ஐரோப்பிய யூனியன் தேசங்கள் கூறியநிலையில், சவுதிய அரேபியவும் சோதனையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
சவுதி அரேபியா இந்தியாவில் இருந்து 70 சதவிதம் (ரூ. 12,000 கோடி அளவில்) அரிசியை இறக்குமதி செய்கிறது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாஸ்மதி அரிசிகளை பரிசோதனை செய்வதற்கு கடினமான விதிமுறைகளை பின்பற்ற சவுதி அரேபியாவின் உணவுத்துறை முடிவு செய்துள்ளது. சோதனையை அடுத்து சில அரிசி ரகங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாஸ்மதி அரிசியில், டிரைசைக்ளாசோல் (Tricyclazole ) என்ற பூச்சிமருந்தின் அளவு ஒரு கிலோ அரிசிக்கு 0.01 மில்லி கிராம் இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் புதிய விதிமுறையை விதித்துள்ளது. இந்த விதிமுறை இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய பாஸ்மதி அரிசியில் அந்த பூச்சிமருந்தின் அளவு கிலோவுக்கு 0.03 மி.கிராம் அளவு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது ஐரோப்பிய யூனியன் விதித்த விதிமுறையை சவுதி அரேபியாவும் பின்பற்றயுள்ளது.
இதுதொடர்பாக இந்திய பாஸ்மதி அரசி ஏற்றுமதி அமைப்பின் தலைவர் விஜய் சேதியா பேசுகையில், “இவ்விவகாரத்தை நாம் முக்கியமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும். மத்திய அரசும், அரியானா மற்றும் பஞ்சாப் மாநில அரசுக்களும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பூச்சிமருந்து பயன்பாட்டை நிறுத்த முடியாதது ஏன்?” என்ற கேள்வியை முன்வைத்து உள்ளார்.  பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 50 சதவிதம் பாஸ்மதி அரிசி சவுதி அரேபியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்போது சோதனையை மேற்கொள்ள மாதிரிகளை பெற எங்களுடைய அமைப்பு தயாராக உள்ளது எனவும் விஜய் சேதியா கூறியுள்ளார். அதில் பூச்சிமருந்து காணப்படவில்லை என்றால் முன்னர் வழங்கப்பட்ட விலையைவிட 10-15 சதவிதம் அதிகமான விலை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் விளைவிக்கப்படும் பாஸ்மதி அரிசிகளில் இதுபோன்ற பூச்சிமருந்து பயன்படுத்தப்படுவது கிடையாது, எனவே இங்கிருந்து வாங்குபவர்கள் அம்மாநிலத்தை நோக்கி படையெடுக்கிறார்கள். கூடுதலான விலை கொடுத்து அரிசியை இறக்குமதி செய்கிறார்கள்.
SHARE