பேருந்தில் பெண்களை வீடியோ எடுத்த இளைஞனுக்கு சரியான பாடம் புகட்டிய மக்கள்

142

அக்குரஸ்ஸவில் இருந்து தவலம நோக்கி பயணித்த பேருந்தில் இருந்த பெண்கள் இருவரை, நபர் ஒருவர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.

பேருந்தில் இருந்தவர்கள் குறித்த நபரை பிடித்து அக்குரஸ்ஸ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதன் போது மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர்கள் பெண்கள் இருவரின் எதிர்ப்பை மீறி வீடியோ எடுத்தமையினால் அவர்கள் பேருந்தில் இருந்த பயணிகளிடம் அதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது பேருந்தில் இருந்தவர்களை இளைஞனை தொலைபேசியுடன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபரான இளைஞர் தெனியாய பிரதேசத்தை சேர்ந்த ஒருவராகும்.

அக்குரஸ்ஸ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

SHARE