பல தவறுகளால் போட்டியில் தோற்றோம்- திக்வெல

192

போட்டி முழுவதும் நாங்கள் நிறைய தவறுகளை இழைத்தோம் என தெரிவித்துள்ள நிரோசன் டிக்வெல போட்டியில் வெல்லவேண்டும் என்றால் நாங்கள் பலதவறுகளை இழக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி நான்கு விக்கெட்களால் தோல்வியடைந்தது.

இலங்கை அணியின் களத்தடுப்பு மிக மோசமாக காணப்பட்டது. தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தின் ஆரம்பத்திலேயே இலங்கை இரண்டு வாய்ப்புகளை தவறவிட்டது. மேலும் களத்தடுப்பும் மோசமானதாக காணப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நிரோசன் திக்வெல ஒரிரு தவறுகளை இழைத்தால் அதனை போட்டியின் போதே சரிசெய்து போட்டியில் வெல்லலாம் ஆனால் பல தவறுகளை இழைக்க முடியாது  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தான் சிறப்பாக விளையாடியதற்கான காரணத்தையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

நான் பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்க மற்றும் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் திலான் சமரவீரவுடன் இணைந்து எனது ஆட்ட முறையில் சில மாற்றங்களை செய்தேன் அதன் காரணமாக நான் கவலையடைந்திருந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் நான் எனது வழமையான பாணியிலேயே விளையாட தீர்மானித்தேன் இன்று அவ்வாறே விளையாடினேன் என டிக்வெல தெரிவித்துள்ளார்.

இரண்டு விக்கெட்களை இழந்தபின்னர் எதிர்மறையான எண்ணத்தில் சிக்கிகொண்டால் மேலும் விக்கெட்களை இழக்கவேண்டியிருக்கும் நான் அதனை நினைக்கவில்லை ஏனைய வீரர்களுடன் இணைந்து இணைப்பாட்டத்தை ஏற்படுத்துவது குறித்தே சிந்தித்தேன் எனவும் டிக்வெல தெரிவித்துள்ளார்.

மத்தியுஸ் ஆடுகளத்தில நுழைந்த பின்னர் எனக்கு நிறைய உதவினார் அவர் ஒரு மூத்த வீரர் அவர் எப்போதும் ஆலோசனை வழங்கிக்கொண்டிருப்பார் எனவும் டிக்வெல குறிப்பிட்டுள்ளார்.

SHARE