ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள இந்தி படம் ‘தடக். இஷான், ஜான்வி இணைந்து நடித்துள்ள இந்த படத்தை சஷாங் கைட்டான் இயக்கி உள்ளார். படத்தின் வசூல் குறித்து தயாரிப்பாளர் கரன் ஜோகர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “தடக் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.
அறிமுக நடிகர்களின் படம் வசூல் சாதனை படைப்பது அரிது. ஜான்வி, இஷான் உங்களை நினைக்கும்போது பெருமையாக உள்ளது” என பதிவிட்டுள்ளார். மராத்தியில் நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியான ‘சாய்ரத்’ படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவானது.