பயிற்சி நெறிகளுக்கு கொடுப்பனவு வழங்காததால் சிரமத்தில் ஆசிரியர்கள்

224

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தையல் பயிற்சி நெறிகளுக்கான கொடுப்பனவுகள் கடந்த ஐந்து மாதங்களாக வழங்கப்படாததன் காரணமாக தையல் பயிற்சியினை வழங்கி வரும் ஆசிரியர்கள் மற்றும் அதுசாரந்தவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு துணுக்காய், ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு கரைதுரைப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மற்றும் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் பிரதேச செயலகத்தால் தையல் பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டு அதன் ஊடாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் குறித்த தையல் பயிற்சி நெறிகளை வழங்கி வரும் ஆசியர்களுக்கு கொடுப்பனவுகள், பயிற்சி நிலையங்களுக்கான வாடகை கொடுப்பனவுகள், மின்சாரக்கட்டணம் காவலாளிகளுக்கான கொடுப்பனவுகள் என எதுவும் வழங்கப்படாமல் உள்ளது.

இதனால் குறித்த பயிற்சிநெறிகளுக்கான பயிற்சிகளை வழங்கி வருகின்ற ஆசிரியர்கள் மற்றும் அதற்கு பொறுப்பாக இருக்கின்றவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

எனவே இதற்கான கொடுப்பனவுகளை வழங்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE