பா.திருஞானம்
மலேசிய திருமுருகன் திருவாக்கு திருப்பீடம் ஏற்பாட்டில் அனைத்துலக முருகபக்தி மாநாடு கொழும்பு பம்பலபிட்டி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் கலந்துகொண்டார்.














மேலும் அதிதிகளாக மலேசிய திருமுருகன் திருவாக்கு திருப்பீடத்தின் முதல்வர் தவதிரு பாலயோகி சுவாமிகள், 20 ஆம் பட்டம் திருக்கபிலய பரம்பரை மயிலம் போம்பர ஆதின முதல்வர் சிர்வளர் சீர் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், பம்பலபிட்டி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சோமாஸ்கந்த ரமேஷ் குருக்கள், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரின் முன்னால் செயலாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் உட்பட முருக பக்கத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அதிதிகளின் ஆன்மீக உரைகள், கௌரவிப்புகள், இசைகச்சேரி உட்பட கலை கலாச்சார நிகழ்ச்சிகள் நூல் வெளியீடுகள் போன்ற நடைபெற்றதுடன் இந்தியா மலேசியா பிரான்ஸ் போன்ற பல நாடுகளில் இருந்தும் முருக பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.