நயன்தாராவின் படக்குழுவுக்கு நடந்த கொடுமை! இடித்து நொறுக்கப்பட்ட அவலம்

142

நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார். தமிழையும் தாண்டி தற்போது தெலுங்கிலும் படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அங்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது அவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் நரசிம்ம ரெட்டி படத்தில் முக்கிய வேடத்தில் கமிட்டாகியுள்ளார். இதில் விஜய்சேதுபதியும் இணைந்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் புறநகர் பகுதிகளில் செட் போடப்பட்டிருந்தது. தற்போது மத்திய அரசு அதை இடித்து தள்ளி அப்புறப்படுத்தியுள்ளதாம்.

விசாரணையில் இது வருமான வரி துறைக்கு சொந்தமான இடமாம். மேலும் அனுமதி பெறாமல் அந்த இடத்தில் செட் அமைக்கப்பட்டுள்ளதாம். ஏற்கனவே அதை அகற்ற சொல்லியும் அதை படக்குழு செய்யாமல் இருந்திருக்கிறார்கள்.

அத்துடன் இது ஏற்கனவே ராம் சரண் சமந்தா நடித்து வெளியாகி வெற்றி பெற்ற ரங்கஸ் தலம் படத்திற்காக போடப்பட்ட செட் தானாம். அதை சிறுது மாற்றம் செய்து நரசிம்ம ரெட்டி படத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என பிளான் போட்டு வைத்திருந்தார்களாம்.

SHARE