அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் வீசிய பலத்த காற்றினால் 217 வீடுகள் சேதமடைந்துள்ளன.
அம்பாறை மாவட்டத்தின் நவகம்புர, சத்தானிஸ்ஸபுர, மிஹிந்துபுர, ஜயவர்தனபுர, ஹரங்காவ ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசியுள்ளது. சுமார் 10 நிமிடங்கள் பலத்த காற்று நீடித்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
காற்றினால் மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். பலத்த காற்றினால் சுமார் 5000 வீடுகளுக்கு மின்சாரத்தடை ஏற்பட்டதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின் கம்பிகள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை, சேதமடைந்த வீடுகளுக்கு தலா 10,000 ரூபா கொடுப்பனவை வழங்கவுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. இதற்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.