கமல்ஹாசனுக்கும், அவரின் படங்களுக்கும் பொதுவாக எல்லா வயது தரப்பினரும் ரசிகர்களாக இருப்பார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்த பிறகு அவருக்கு அந்த கூட்டம் இன்னும் அதிகமாகிவிட்டது.
அவரின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் விஸ்வரூபம் 2. வரும் ஆகஸ்ட் 10 ல் ரிலீஸ் ஆகும் ஏற்கனவே வெளியான விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சி என்பதால் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
கமல்ஹாசன் ஏற்கனவே பிக்பாஸ் மேடையில் தான் பாடல்களை ரிலீஸ் செய்தார். இந்நிலையில் இப்படத்தை அதே நிகழ்ச்சியை ஒளிபரப்பும் சானல் நிறுவனமே அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாம்.