இலங்கையில் அதிரடியாக கைது செய்யபட்ட 6 பெண்கள்! திடுக்கிட வைக்கும் சம்பவம்

175

பழைய கோட்டை வீதி , ராஜகிரிய பிரதேசத்தில் நடாத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியொன்று நேற்றிரவு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் , இதன் போது 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த விபச்சார விடுதி மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

குறித்த விடுதியின் முகாமையாளராக செயற்பட்ட பெண்ணொருவரும் மற்றும் விபச்சார தொழிலில் ஈடுபட்ட 5 பெண்களுமே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட பெண்கள் 26 முதல் 38 வயதுக்கிடைப்பட்டவர்களாவர்.

இவர்கள் இன்றைய தினம் புதுக்கடை இலக்கம் 04 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் படவுள்ளனர்.

SHARE