மக்களே இதை என்னிடம் கூறினார்கள்! மஹிந்த தகவல்

462

நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சி பீடத்தில் ஏற்றிய நபர்களே இன்று அரசாங்கத்தை கடுமையாக திட்டித் தீர்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டு மக்கள் இன்று எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமைகள் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்த பலரும் அரசாங்கத்தை எதிர்க்கின்றனர்.

பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பங்கேற்ற போது மக்கள் இதனை என்னிடம் கூறினார்கள்.

நல்லாட்சி அரசாங்கம் இந்த நாட்டுக்கு நல்லது செய்யும் என்றே மக்கள் கருதினார்கள். எனினும் இந்த அரசாங்கம் எதனையும் செய்யவில்லை.

அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே சென்று பெரிதாக கதைத்தாலும் எதனையும் செய்யவில்லை.

அனுராதபுரத்தில் பெறுமதிவாய்ந்த மரங்கள் வெட்டப்படுகின்றன, இது குறித்து யாரும் கவனிப்பதில்லை.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை இப்பொழுது மறந்துவிட்டார்கள்.

நாட்டில் என்ன நடக்கின்றது என்பது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்கின்றார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

SHARE