முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று பிரதேச மாநாட்டு மண்டபத்தில் இணைத்தலைவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது பிரதேச செயலகத்தின் ஊடாக செயற்படுத்தப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் சுகாதாரம், கல்வி மற்றும் வீதி அபிவிருத்தி உள்ளிட்ட திணைக்கள ரீதியான முன்னேற்றங்கள் மற்றும் அபிவிருத்தி வேலைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதேவேளை, மாந்தை கிழக்கு பனங்காமம் குளத்தின் புனரமைப்பு தெடர்பில் இரு குழுக்களிடையே வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றதால் கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து, மாந்தை கிழக்கு பாலிநகர் பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள மதுபானசாலையை அகற்ற நடவடிக்கை எடுக்காவிடின் மக்கள் இணைந்து அதற்கு எதிராக போரட வேண்டிய நிலை ஏற்படும் என வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இணைத்தலைவர்களான அமைச்சர் றிசாட் பதியுதின், பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.