இலங்கையின் பிரபல நடிகையான என்டலீன் ரொஷானாவிடம் பாரிய நிதி மோசடி செய்த நபர் கைது

165

இலங்கையின் பிரபல நடிகையான என்டலீன் ரொஷானாவிடம் பாரிய நிதி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானில் தயாரிக்கும் சொகுசு ரக மோட்டார் வாகனத்தை இறக்குமதி செய்து தருவதாக கூறி,10 லட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது.

மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட திரைப்பட இயக்குனர் நேற்று மிரிஹான விசேட பொலிஸ் குற்ற பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 லட்சம் ரூபாய் பணத்தை மோசடியான முறையில் ஏமாற்றப்பட்டதாக கூறி குறித்த நடிகை மிரிஹான பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பின்னர் மேல் மாகாண பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் வசந்த விக்ரமசிங்க குறித்த முறைப்பாடு தொடர்பில் ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு குறித்த சந்தேக நபரை நேற்று கைது செய்துள்ளார்.

2016-09-21 ஆம் திகதியன்று குறித்த இயக்குநர் மோட்டார் வாகனம் ஒன்று பெற்றுத் தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக நடிகை முறைப்பாடு செய்துள்ளார்.

3 மாதங்களுக்குள் சொகுசு வாகனம் ஒன்றை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்த இயக்குநர், குறித்த மோட்டார் வாகனத்தை பெற்று தரும் வரை பழைய மோட்டார் வாகனம் ஒன்றை வழங்கியதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது

எனினும் 4 மாதங்களின் பின்னர் பழைய வாகனம் தனது நண்பருடையது அவர் மீண்டும் கேட்பதாக கூறி கொண்டு சென்றுள்ளார்.

பெற்றுக் கொண்ட பணத்தை மீள வழங்குவதாக கூறி பயன்படுத்த முடியாத காசோலை ஒன்றையும் வழங்கி ஏமாற்றியுள்ளார்.

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளில் நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் இன்றைய தினம் நுகேகொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

SHARE