அனைத்து அரசாங்க ஊழியர்களின் சம்பளமும் அடுத்தாண்டில் அதிகரிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சம்பள அதிகரிப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு ஏற்படும். எனினும் எத்தனை சதவீதத்தால் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்பதை நிதியமைச்சு தீர்மானிக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பில் ஆராய விசேட சம்பள ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசாங்க ஊழியர்கள் மற்றும் புகையிரத சேவை உள்ளிட்ட சம்பள முரண்பாடுகள் காணப்படும் சேவைகள் தொடர்பில் ஆராய்ந்து, இரு மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை வழங்கும் வகையில் குறித்த ஆணைக்குழுவை நியமிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.