ஹெலிகொப்டர் விசிறியால் தலை துண்டிக்கப்பட்டு பலியான நபர்

149

நேபாளத்தின் மானசரோவர் யாத்திரைக்கு சென்ற இந்திய பக்தர் ஒருவர் ஹெலிகொப்டர் விசிறியால் தலைதுண்டிக்கப்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திபெத்தின் மானசரோவர் ஏரி கடல் மட்டத்திலிருந்து 4590 மீற்றர் உயரத்தில் உள்ள நன்னீர் ஏரியாகும்.

இதன் நீரை பருகும் நபர் இறப்பிற்கு பின் சிவபெருமானை சென்றடைவார் என்றும், 100 ஜென்மத்தில் செய்த பாவங்கள் தீரும் எனவும் நம்பப்படுகிறது.

எனவே இப்புனித தலத்திற்கு இந்தியா, நேபாளம், திபெத் மற்றும் அண்டை நாடுகளிலிருந்து யாத்ரீகர்கள் செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு 57 பக்தர்கள் கொண்ட முதல் குழு கடந்த யூன் 20ம் திகதி லிப்புலேக் கணவாய் வழியாக மானசரோவர் புறப்பட்டு சென்றது.

இங்குள்ள ஹில்ஸா மற்றும் சிம்கோட் பகுதிகளுக்கு இடையே சாலை வசதிகள் இல்லாததால் சிறிய ஹெலிகொப்டரில் செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று ஹில்ஸா பகுதியில் தரையிறங்கிய ஹெலிகொப்டரில் இருந்து இறங்கிய யாத்ரீகர் ஒருவர் முன்னோக்கி செல்வதற்கு பதிலாக பின்னோக்கி சென்றா்.

இதில் ஹெலிகொப்டரின் வால்பகுதியில் சுழன்று கொண்டிருந்த விசிறியில் சிக்கி பலியானார்.

உயிரிழந்தவர் மும்பையை சேர்ந்த நாகேந்திர குமார் கார்த்திக் மேத்தா(வயது 42) என தெரியவந்துள்ளது.

SHARE