ஃபிளாஷ் முறையில் விற்பனைக்கு வரும் ஜியோபோன் 2

272

ஃபிளாஷ் முறையில் விற்பனைக்கு வரும் ஜியோபோன் 2

ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆகஸ்டு 15-ம் தேதி முதல் ஜியோபோன் 2 கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், ஜியோபோன் 2 ஃபிளாஷ் விற்பனை இன்று (ஆகஸ்டு 16) மதியம் 12.00 மணிக்கு துவங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஃபிளாஷ் விற்பனை நடைபெறுகிறது.
க்வெர்டி கீபோர்டு கொண்டிருக்கும் ஜியோபோன் 2 மாடலில் 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே, 4 புறமும் சுழலும் நேவிகேஷன் பட்டன், 2 எம்பி பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஜியோபோன் போன்றே இந்த மாடலிலும் 4ஜி வோல்ட்இ, கை ஓஎஸ் (Kai OS), வழங்கப்பட்டுள்ளது.
மெமரியை பொருத்த வரை 512 எம்பி ரேம், 4 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. வோல்ட்இ வசதியுடன், வோ-வைபை வசதி, எஃப்.எம்., வைபை, ஜிபிஎஸ், என்.எஃப்சி. உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
2000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஜியோபோன் 2 மாடிலில், அனைத்து ஜியோ செயலிகளும் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் 22 இந்திய மொழிகளில் புதிய ஜியோபோனினை பயன்படுத்த முடியும்.
ஜியோபோன் 2 சிறப்பம்சங்கள்:
– 2.4 இன்ச்,320×240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
– டூயல் கோர் பிராசஸர்
– 512 எம்பி ரேம்
– 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 2 எம்பி பிரைமரி கேமரா
– 0.3 எம்பி செல்ஃபி கேமரா
– 4ஜி வோல்ட்இ, வோ-வைபை, ஜிபிஎஸ்
– 2000 எம்ஏஹெச் பேட்டரி
இந்தியாவில் புதிய ஜியோபோன் 2 விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜியோ சார்பில் மான்சூன் ஹங்காமா ஆஃபர் அறிவிக்கப்பட்டது. அதன்படி பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் ஃபீச்சர்போனினை வழங்கி, ஜியோபோனினை ரூ.501-க்கு பெற முடியும்.
சமீபத்தில் ஜியோபோனில் கூகுள் மேப்ஸ் செயலி பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்பட்ட நிலையில், விரைவில் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்றவற்றையும் பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE