இலங்கை வருகிறார் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்

445

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடேரா, 5 நாட்கள் பயணமாக இந்தியா மற்றும் இலங்கைக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

இதற்கமைய, நாளைய தினம் தனது விஜயத்தை ஆரம்பிக்கும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர், இந்தியாவுக்கு தனது முதலாவதாக பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

பின்னர், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளார்.

இந்து சமுத்திரத்தில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளும் நோக்கில் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயம் அமையவுள்ளது.

இதன்போது அவர் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE