ஸ்ரீலங்கன் விமான சேவையின் விசேட அறிவிப்பு

465

வெள்ளப்பெருக்கு காரணமாக நாளைய தினம் வரை மூடப்பட்டிருந்த கேரளா – கொச்சின் விமான நிலையத்தை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மூடுவதற்கு குறித்த விமான நிலைய அதிகரிகள் தீர்மானித்துள்ளனர்.

இவ்வாறு கொச்சினுக்கான விமான சேவைகள் தாமதமடைந்துள்ளதால் ஸ்ரீலங்கன் விமான சேவை, பல மாற்று நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

இதன்படி கொச்சின் நோக்கி பயணிப்பதற்காக பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்துள்ள பயணிகள், வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படாத திருவனந்தபுரம் அல்லது தென்னிந்தியாவின் வேறு எந்தவொரு விமான நிலையத்திற்கோ மேலதிக கட்டணமின்றி பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி கொச்சின் விமான நிலையம் மூடப்பட்டதோடு, அங்கிருந்து இலங்கை நோக்கி பயணிக்க ஆயத்தமாகவிருந்த பயணிகளுக்கு தங்கமிட வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

SHARE