வவுனியாவில் விடுதி ஒன்றிலிருந்து சடலம் மீட்பு

121

வவுனியா  பஸார் வீதியில் அமைந்துள்ள விடுதியொன்றிலிருந்து இன்று காலை 10.30 மணியளவில் வயோதிபர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு பின்பாக உள்ள பஸார் வீதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் யாழ்ப்பாணம் வேலணை பகுதியினை சேர்ந்த 71 வயதுடைய வேலன் கந்தசாமி என்ற வயோதிபரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த நபர் இன்று அதிகாலையிலையே விடுதியில் வந்து தங்கியதாகவும் காலை 10.30 மணியளவில் விடுதி ஊழியர் சென்று பார்த்த போது இறந்த நிலையில் இருப்பதை அவதானித்து வவுனியா பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE