அட்டன் ஸ்டெதன் வெஸ்டன்  தோட்டத்தில் உள்ள 03லயன் குடியிருப்பு தொகுதிக்கு மேல் உள்ள  மலையில் பாரிய வெடிப்பு 

164
(நோட்டன்  பிரிட்ஜ் நிருபர்  மு.இராமசந்திரன்) 
அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அட்டன் ஸ்டெதன் வெஸ்டன் தோட்டபகுதியில் உள்ள 03லயன் குடியிருப்பு தொகுதிக்கு மேல் உள்ள மலையில் ஒன்றின் மீது பாரிய வெடிப்பு காணபட்டுள்ளதால் குறித்த தோட்டபகுதியில் வசித்து வந்த 50குடும்பங்களை சேர்நத 200பேர் அங்கிருந்து இடம் பெயர்க்கபட்டு பாதுகாப்பாக அட்டன் புருட்கில் தமிழ் வித்தியாளயத்தில் தங்க வைக்கபட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த தோட்டபகுதியில் உள்ள மலை ஒன்றின் மேல்  காணபட்ட பாரிய வெடிப்பினை 19.08.2018.ஞாயிற்றுகிழமை மாலை வேலையில் இனங்காணபட்டுள்ள பிறகே அட்டன் பொலிஸார் மற்றும் பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர்கள் சென்று குறித்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி  தங்கவைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
அட்டன் ஸ்டெதன் வெஸ்டன் தோட்டபகுதியில் இனங்கானபட்ட பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் உளள் மண் மேடு  சரிந்து விழுந்தால் மூன்று லயன் குடியிருப்புகளும் மண்ணில்  புதையுண்டு செல்ல கூடிய நிலமை  அப்பகுதியில் காணபடுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பாதுகாப்பாக தங்கவைக்கபட்டுள்ள மக்களை இலங்கை தொழிலாளர்  காங்ரசின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அம்மக்களுக்கான உளர் உணவு பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கையினை அம்பகமுவ பிரதேசசெயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
SHARE