மத்திய பிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், 2 குழந்தைகள் பலி

149

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் நகரின் கம்லாபார்க் பகுதியில் மழையால் நனைந்திருந்த ஒரு வீட்டின் சுவர் இன்று காலை திடீரென இடிந்து விழுந்ததில் ஒரு பெண் மற்றும் அவரது 2 குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் போபால் நகரின் கம்லாபார்க் பகுதியில் மழையால் நனைந்திருந்த ஒரு வீட்டின் சுவர் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது.

வீட்டில் இருந்த ஒரு பெண் மற்றும் அவரது 2 குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் அதே குடும்பத்தைச் சேர்ந்த 3  பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE