மூளை ஆரோக்கியமா இருக்கணுமா? இதெல்லாம் சாப்பிடுங்க

164

உலகிலேயே மிக மிக ஆச்சரியம் மனித மூளை. அதில் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன.

ஒவ்வொரு செல்லையும், சிறிய மணல் துகள் அளவுக்கு பெரிதாக்கினால் நமது மூளையில் உள்ள செல்களை நிரப்ப ஒரு லாரி போதாது. இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூட்ரான்கள், நரம்பு செல்கள் உள்ளன.

இவற்றுக்கு இடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம் தான், நமது சிந்தனை. மனிதன் உயிர் வாழும் வரை இந்த செல்களிடையே மின் துடிப்புகள் இருந்து கொண்டே இருக்கின்றன.

மூளையின் அடர்த்தி, அதில் உள்ள மடிப்புகள், பாலம் பாலமாக கசங்கி போய் இருப்பதுதான் புத்திசாலித்தனத்தை தீர்மானிக்கிறது. மூளை, முதுகுதண்டில் இருந்து முளைக்கிறது.

இத்தகையை மூளையின் ஆரோக்கியத்திற்கும், சுறுசுறுப்பான செயல்பாட்டிற்கும் எந்தெந்த நேரத்தில் எந்த வகையான உணவுகளை சாப்பிடுவது நலம் சேர்க்கும் என்பது பற்றி பார்ப்போம்.

மூளையை பாதுக்காக்க உதவும் உணவுகள்
  • தினமும் காலையில் லவங்கத்தை பொடி செய்து அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் சூடான நீரில் கலந்து பருகுவதன் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்தும் விடுபடலாம். மேலும் லவங்கப்பட்டையில் வேதியியல் பொருட்கள் பெருமூளையின் சீரான இயக்கத்திற்கும், ரத்த ஓட்டத்திற்கும் வழிவகை செய்கின்றன.
  • தினமும் காலை உணவுடன் முட்டையை சேர்த்து சாப்பிடுவதால் முட்டையில் இருக்கும் வைட்டமின் பி, கோலின் போன்றவை நினைவாற்றல், மனநலத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டவை.
  • பாதாம் பருப்பில் உயர்தர ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளதால் தினமும் நான்கு பாதாம் பருப்பு சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான கலோரிகள் கிடைப்பதோடு மூளையும் ஆரோக்கியமானதாக இருக்கும்.
  • மதிய உணவில் தயிர் சேர்த்துக்கொள்ளவதால் அதில் உள்ள அமினோ அமில டைரோசின் டோபமைன் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்குகின்றன.
  • யோகர்ட் சாப்பிடுவதன் மூலம் தேவையான அளவு அமினோ அமிலங்கள் கிடைக்கின்றன. இது நினைவாற்றலை அதிகரிக்கிறது. எனவே யோகர்ட் உடன் உலர் பருப்புகள், பழங்கள் கலந்து சுவையான உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் மூளைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
  • அசைவ உணவுகளில் அதிக சத்து நிறைந்தது மீன் அதிக அளவு உள்ள ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மூளையின் வளர்ச்சிக்கு ஏற்றது. மேலும் சல்மான், டுனா வகை மீன்களில் அதிக அளவில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
  • வால்நெடில் ஆன்டிஆக்சிடெண்ட் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அறிவாற்றல் திறனை அதிகரிக்கும். நினைவாற்றலும் மேம்படும். தினமும் மாலை வேளையில் 7 வால்நெட் சாப்பிடுவது மூளைக்கு மிகவும் நல்லது.
SHARE