-மன்னார் நகர் நிருபர்-
மன்னார் இஸ்லாமிய தஅக் வா நிலையத்தின் ஏற்பாட்டில் நபி வழியிலான புனித ஹஜ்ஜீப் பெருநாள் தொழுகை இன்று (22) இடம் பெற்றது.
மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள முற்ற வெளியில் இன்று புதன் கிழமை (22) காலை 6.30 மணியளவில் புனித ஹஜ்ஜீப் பெருநாள் தொழுகை மௌலவி ரி.தஸ்னீம் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது புனித ஹஜ்ஜீப் பெருநாள் தொழுகை மற்றும் பிரசங்கத்தை மௌலவி ரி.தஸ்னீம் நிகழ்த்தினார்.
இதன் போது ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள் என நூற்றுக்கணக்கான முஸ்ஸீம்கள் கலந்து கொண்டு புனித ஹஜ்ஜீப் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர்.
இதே வேளை மன்னாரில் உள்ள பள்ளிவாசல்களில் புனித ஹஜ்ஜீப் பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றது.
இதன் போது பல நூற்றுக்கணக்கான முஸ்ஸீம்கள் கலந்து கொண்டு ஹஜ்ஜீப் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.





