வவுனியாவை சேர்ந்த மனநல வைத்தியர் தலைமறைவு.

164

 

அன்றிரவு 10.30 மணியளவில் அனைவரும் நித்திரை…ஆழ்ந்த நித்திரையிலிருந்து ருச்சிராவை திடீரென பாய்ந்து கத்தியால் குத்த முயற்சிக்கின்றார் வவுனியாவை சேர்ந்த மனநல வைத்தியர்.

கூச்சிலிட்ட அம்மாவை விரட்டி விரட்டி…துரத்திய ருச்சிராவின் காதலன்……

ருச்சிரா பூகொடை பகுதியில் வசிக்கும் அழகிய யுவதி ஆவாள்… சிறிய வயதிலேயே அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார்.

குறித்த இளைஞர் மது போதைக்கு அடிமையானதால் திருமணம் முடிந்து சிறிது காலத்திலேயே இருவரும் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

பிரிவில் தனிமையில் வாழ்ந்து வந்த ருச்சிராவிற்கென தொழில் ஒன்று இல்லாமையினால் வாழ்வாதாரத்திற்கு பெரும் துயரத்தினை அனுபவித்து வந்துள்ளார்.  இந்நிலையிலேயே ருச்சிராவிற்கு மேடை கச்சேரிகளில், இசை நிகழ்ச்சிகளில் நடனமாடும் வாய்ப்பும் கிடைத்தது.

ருச்சிரா நடனமாடுவதில் திறமைசாலி என்பது மட்டுமின்றி அழகிலும் அவள் குறைந்தவளில்லை.  அவளின் அழகினை சாதமாக பயன்படுத்திக்கொண்ட சமூகம் அவளை மதுவிற்கு அடிமையாக்கியது.

மது அருந்த பழகிக்கொண்ட ருச்சிரா தனது வாழ்க்கையை மேலும் ஆடம்பரமாக்கிக்கொண்டால்.  நடனமாடுவதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டிய ருச்சிரா அவளது வாழ்க்கை அவளுக்கென பிறந்துள்ள ஒரு குழந்தையும் மறந்து பொழுது போக்கு வாழ்க்கையை நாடி நகர்ந்தாள்.

இவ்வாறிருக்கையில் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கும் வாழ்க்கையை தொடர்பில் யோசித்தாள்.  இதன்போது அவளுக்கு மனக்குழப்பம் ஏற்பட… யாரிடம் கதைப்பதில்லை… அம்மாவிடம் பிள்ளையிடம் என அனைவரிடமிருந்தும் தனிமைப்பட்டாள்.

மனம் நொந்து வேதனை தீயில் வெந்துக்கொண்டிருந்த சந்தரப்பத்தில்தான் மனநல மருத்துவர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.  அவர், வவுனியாவை சேர்ந்தவர்… அறிவுரைகள் வழங்கியுள்ளார்.. ருச்சிராவை கவர்ந்தார் அவரின் மோக வார்த்தைகள் மூலம்.

ருச்சிரா மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளதால் அவளை பூகொடையை விட்டு வெளியே சென்று நகரொன்றில் தங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அதற்கு இணங்கிய ருச்சிராவை கொட்டாவை பகுதியில் 37 ஆயிரம் ரூபாவிற்கு வாடகை வீட்டொன்றில் தங்கவைத்துள்ளார்.

தங்கியிருந்த ருச்சிராவுடன் மனநல வைத்தியரும் காலபோக்கில் தங்கி வாழ்ந்து வந்தார்.

இதன்போது அவர் இடைக்கிடையே தனது அம்மாவை பார்வையிட வவுனியாவிற்கு சென்று வருவார்.  ஆனால் குறித்த நபர் வவுனியாவிற்கு சென்றவுடன் அவரின் கையடக்க தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டு விடும்.  இதனால் சந்தேகம் கொண்ட ருச்சிரா… அவர் தொடர்பில் விசாரிக்க முடிவு செய்தால்.

அதன் பயனாக குறித்த மனநல மருத்துவர் வவுனியாவில் திருமணம் முடித்து குடும்பம் ஒன்று இருக்கின்றார் என்பதை அறிந்து கொண்டாள்.

பின்னர் இருவருக்குமிடையில் சிறிய சிறிய சண்டைகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் பாரிய அளவில் சண்டை ஏற்படவில்லை.

ருச்சிராவும் ஏற்கனவே திருமணம் முடித்தவர் என்பதே அதற்கு காரணமா கும்.  இந்நிலையில் வவுனியாவிலிருந்து திரும்பிய மனநல மருத்துவர் மற்றும் முதல் திருமணம் முடித்தவர் மூலம் கிடைக்கப்பெற்ற குழந்தை என மூவரும் ஒரு அறையில் நித்திரை கொண்டிருக்கையில், ருச்சிராவின் அம்மா பிரிதொரு அறையில் நித்திக்கொண்டுள்ளார்.

திடீரென விழித்த மனநல மருத்துவர் ருச்சிராவை கத்தியால் வெட்டியுள்ளார்.  கையில் படுகாயத்துடன் ருச்சிரா கூச்சலிட ருச்சிராவின் தாயார் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளார்.  இதன்போது ருச்சிராவின் அம்மாவை துரத்திக்கொண்டு போய் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

ருச்சிரா கூச்சலிட்டதால் அயலவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை மனநல மருத்துவர் தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளார்.  விடயத்தினை அம்பலப்படுத்தாத ருச்சிரா தனது தாயாரை வைத்தியசாலையில் சேர்ப்பித்து சில நிமிடங்களில் தயார் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் காவல் துறையினர் வீட்டினை பரிசோதனை செய்த போது வீட்டின் மேல் மாடியில் இரத்த துளிகள் ஆங்காங்கே காணப்பட்டுள்ளது.

சந்தேகம் கொண்ட காவல் துறையினர் ருச்சிராவிடம் விசாரணைகளை நடத்திய போது அனைத்து விடயங்களையும் விளக்கமாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தப்பிச்சென்ற வவுனியாவை சேர்ந்த மனநல மருத்துவரை கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE