தென் கொரியாவில் நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ள கரம் உலகக் கிண்ண போட்டிகளில் சம்பியன் பட்டத்தை வென்றெடுக்கும் குறிக்கோளுடன் இலங்கை அணியினர் புறப்பட்டுச் சென்றனர்
சுவிஸ் லீக் கரம் போட்டிகளில் இரண்டு தடவைகள் (மாலைதீவுகள் 2014, ஐக்கிய இராச்சியம் 2016) சம்பியன் பட்டத்தை சுவீகரித்த சமில் குறே (சம்பத் வங்கி) தலைமையிலான ஆடவர் அணியில் 2012இல் உலக சம்பியனான நிஷான்த பெர்னாண்டோ (கடற்படை), றோயல் கல்லூரியின் ஷஹீத் ஹில்மி, சந்திம பெரேரா (விமானப்படை) ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
யசிக்கா (விமானப்படை) தலைமையிலான மகளிர் அணியில் ஜோசப் ரொஷிட்டா (கடற்படை), சலனி லக்மாலி லியனகே (கடற்படை), மதுக்கா டில்ஷானி (இராணும்) ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
இலங்கை அணியினர் நாட்டிலி ருந்து புறப்படுவதற்கு முன்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவபிரிய ஆகியோரை சம்பிரதாயபூர்வமாக சந்தித்து விடைபெற்று சென்றனர்.