எந்த நடிகரின் ரசிகர்கள் கொண்டாடமாக இருக்கிறார்களோ இல்லையோ அஜித் ரசிகர்கள் இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக அஜித் விஸ்வாசம் படப்பிடிப்பு தொடங்கியும் இன்னும் படத்தின் ஃபஸ்ட் லுக் வரவில்லையே என ஏங்கினர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.40 மணியளவில் ஃபஸ்ட் லுக் வந்துவிட்டது, ரசிகர்களும் கொண்டாடமாக இருக்கின்றனர். இப்பட கதை மதுரை மற்றும் தேனி பின்னணியில் உருவாகிறது என்று இதுவரை நமக்கு வந்த தகவல். ஆனால் சமீபத்தில் ரசிகர்கள் அஜித்துடன் எடுத்த புகைப்படங்கள் பின்னணியில் இருக்கும் விஷயங்கள் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிரா நம்பர் கொண்ட ஆட்டோ, ஹிந்தியில் பேனர்கள் என காணப்படுகிறது. இதனால் மதுரை,தேனி தாண்டி மகாராஷ்டிராவில் என்ன கதையாக இருக்கும் என ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.