மன்னார் மாவட்ட நீதவான் ரீ.ஜே. பிரபாகரன் கொழும்பிற்கு திடீர் இடமாற்றம்

164

 

மன்னார் மாவட்ட நீதவானாக கடமையாற்றிய ரீ.ஜே. பிரபாகரனுக்கு கொழும்பிற்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

நேற்று மாலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இடமாற்றக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் கொழும்பில் தனது கடமையை பெறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிய வந்துள்ளது.

மன்னார் மாவட்ட நீதவானாக ரீ.ஜே.பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டு மூன்று மாதங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பல்வேறு வழக்கு விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வந்திருந்தார்.

மேலும் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதோடு, சில வழக்குகளுக்கு கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வந்தமை மற்றும், நீதவானுக்கு எதிராக தொடுக்கப்பட்ட முறைப்பாடுகள் போன்றவற்றின் காரணமாகவே மன்னார் நீதவான் ரீ.ஜே.பிரபாகரனுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

 

SHARE