உள்ளுர் 20க்கு 20 கிரிக்கெட் போட்டிகளின்போது சந்தேகத்துக்கு இடமான முறையில் செயற்பட்ட இரண்டு இந்தியர்கள் கைது

186

இலங்கையில் நடைபெறும் உள்ளுர் 20க்கு 20 கிரிக்கெட் போட்டிகளின்போது சந்தேகத்துக்கு இடமான முறையில் செயற்பட்ட இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

கண்டி பல்லேகல மைதானத்தில் காலி மற்றும் தம்புள்ளை அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது இவர்கள் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஊழல் எதிர்ப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கைப்பேசிகளில் கிரிக்கெட் அப்ஸ் தரவிறக்கம் செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன

SHARE